Skip to main content

ஆதிபுருஷ் - சலுகைகளை அள்ளி வீசும் திரைப்பிரபலங்கள்

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

ranbir kapoor to book 10,000 tickets of Adipurush for underprivileged children

 

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். 

 

3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்தது. இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் இறுதி ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரை போலவே இதிலும் கிராபிக்ஸ் காட்சிகள் வீடியோ கேமில் உள்ளதைப் போல் உள்ளதாக சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர். 

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 16 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பிரபாஸ் அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று தரிசனம் மேற்கொண்டார். மேலும் இயக்குநர் ஓம் ராவத் மற்றும் கதாநாயகி க்ரீத்தி சனோன் உள்ளிட்டோரும் திருப்பதி சென்று தரிசனம் செய்த நிலையில், க்ரீத்தி சனோனை வழியனுப்பும்போது இயக்குநர் அவருக்கு முத்தம் கொடுத்ததால் அது சர்ச்சையானது. இதற்கு கோவிலுக்கு முன்பு இப்படி முத்தமிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக கண்டனம் தெரிவித்தது. 

 

இப்படம் திரையிடும் திரையரங்கில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விடப் போவதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இந்நிலையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தெலுங்கானாவில் இப்படத்துக்கு 10,000 டிக்கெட் இலவசமாக வழங்கவுள்ளதாகக் கூறியுள்ளார். 

 

இதனைத் தொடர்ந்து நடிகர் ரன்பீர் கபூர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இப்படத்தை காண்பித்து உதவ 10,000 டிக்கெட்டுகளை புக் செய்துள்ளார். இதே ராமாயணம் கதையில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனிமல் பட விமர்சனம் குறித்து ராஷ்மிகா பதில்  

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
rashmika about his animal scene troll

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா கடைசியாக பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் ரூ.900 கோடி வசூலித்தாக கூறப்படுகிறது. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அனிமல் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் ராஷ்மிகா பேசும் தொனி கிண்டலுக்கும் கேலிக்கும் சமூக வலைதளங்களில் உள்ளானது. இந்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு தற்போது பதிலளித்துள்ளார் ராஷ்மிகா. இது தொடர்பாக பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள ராஷ்மிகா, “பெண்களை உருவ கேலி செய்யும் மனிதர்களை எனக்கு பிடிக்காது. அவர்கள் என் படத்தை பற்றியும், நான் வசனம் பேசும்பொழுது என் முகத்தை பற்றியும் கிண்டல் செய்கிறார்கள். என் நடிப்பு எப்படி இருந்தது என எனக்கு தெரியும். நான் அந்த காட்சியில் நடித்து ஐந்து மாதங்கள் ஆகிறது.

rashmika about his animal scene troll

 

அந்த சீன் ஒன்பது நிமிடம் கொண்ட பெரிய சீன். அதில் நடிக்கும் போது செட்டில் இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினார்கள். சிறப்பாக வந்துள்ளதாகவும் சொன்னார்கள். ஆனால் ட்ரெய்லர் வெளியான போது, அதே காட்சியில் நான் பேசிய ஒரு வசனம் கிண்டலுக்குள்ளானது. அதை பார்க்கும் போது ஒரே காட்சியை செட்டில் இருந்தவர்கள் ரசிக்கிறார்கள், ரசிகர்கள் ட்ரோல் செய்கிறார்கள். அப்போது நான் எதில் வாழ்கிறேன் என தோன்றியது. என்ன நடித்தேன் என்பது எனக்கு தெரியும். ஆனால் ரசிகர்களுக்கு அந்த 10 செகண்ட் மட்டும் தான் தெரிகிறது” என்றார்.

Next Story

“தயவு செய்து பார்க்காதீங்க...” - குஷ்புவை எச்சரித்த மகள்கள்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
kusboo about animal movie

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் அனிமல். இப்படத்தை அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். 4 பேர் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு 8 பேர் இசையமைத்திருந்தனர். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் ஆலியா பட், த்ரிஷா, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் படக்குழுவை புகழ்ந்து தள்ளினர். வசூலிலும் உலகம் முழுவதும் ரூ. 900 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படம் குறித்து தொடர்ந்து பலரும் எதிர்மறையான விமர்சனத்தை வைத்தனர். அந்த வகையில், முன்னதாக காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் நாடாளுமன்றத்தில், “வன்முறை மற்றும் பெண் வெறுப்பை நியாயப்படுத்தும் திரைப்படம். வெட்கக் கேடானது” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். பின்பு விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் பட ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனி, “நச்சுத்தனமான ஆண்களின் கோட்பாடுகளை நியாயப்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். 

இந்த நிலையில், நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, அனிமல் படத்தை விமர்சித்துள்ளார். சமீபத்திய கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற அவரிடம், அனிமல் பட வெற்றி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “முதலில் நான் அனிமல் படம் பார்க்கவில்லை. ஏனென்றால் அது நான் பார்க்க விரும்பும் படமாக இருக்கவில்லை. ஒரு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக, துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள், திருமணத்துக்கு பின்னான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் முத்தலாக் போன்ற பல வழக்குகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அனிமல் போன்ற ஒரு பெண் வெறுப்பு பேசும் படம் வசூலில் பெரியளவு ஈட்டும்பொழுது அதை வெற்றி பெறச் செய்யும் மக்களின் மனநிலையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் படங்களில் கூட எனக்கு பெரிய பிரச்சினை இருந்தது. ஆனால் இயக்குநரை நான் குறை கூறவில்லை. ஏனென்றால் அவரை பொறுத்தவரை வெற்றிதான் முக்கியம். என் மகள்கள் அதுபோன்ற படங்களைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை. ஆனால் படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக அனிமல் படத்தை பார்த்தார்கள். படம் பார்த்து திரும்பி வந்து, அம்மா தயவு செய்து அந்த படத்தைப் பார்க்காதீர்கள் என எச்சரித்தார்கள்” என்றார்.