ரன்பீர் கபூர் - ஆலியா பட் நடிக்கும் பிரம்மாண்ட படம்; புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு 

ranbir kapoor and alia bhatt starring brahmastram movie update out now

இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர் 'பிரம்மாஸ்திரம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆலியா பட் நடிக்கிறார். இவர்களுடன் நாகார்ஜுனா அக்கினேனி, மௌனி ராய், அமிதாப்பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் மூன்று பாகங்களாக தயாராகவுள்ளது.இந்திய புராணங்கள் மற்றும் நவீன உலகம் என இரண்டும் கலந்த ஒரு காவியமாக பிரம்மாஸ்திரம், 2022 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் 2022 ஆம் செப்டம்பர் 9ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இயக்குநர் அயன் முகர்ஜி படத்தின் புதியபோஸ்டரைதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் சிவன் மற்றும் ஈஷா இவர்களின் காதல் பாடலான'கேசரியா...' பாடலின் சிறிய க்ளிம்ப்ஸ் காட்சிகளையும் வெளியிட்டுள்ளார். விரைவில் முழு பாடல் குறித்தஅப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

alia bhatt ranbir kapoor
இதையும் படியுங்கள்
Subscribe