ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடியின் அறிவிப்பால் பொழியும் வாழ்த்து மழை

Ranbir Kapoor and Alia Bhatt announce pregnancy

பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர்கள் முன்னிலையில் கடந்தஏப்ரல் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகும்இருவரும் தங்களது திரைப்பட பணிகளை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடி தங்களுக்குகுழந்தை பிறக்கப் போவதாகஅறிவித்துள்ளது. திருமணமாகி மூன்று மாதங்களான நிலையில் தான் கருவுற்று இருப்பதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த ஆலியா அது தொடர்பான புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

aliance parties Bollywood ranbir kapoor
இதையும் படியுங்கள்
Subscribe