Advertisment

திருமணத்திற்கு வருபவர்களுக்கு புது ரூல்ஸ் போட்ட ராணா!

ranaa bajaj

Advertisment

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் ராணா. தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ராணா, அண்மையில் தனது திருமணம் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டார்.

ஹைதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவரைதான் ராணா காதலித்து வந்துள்ளார். அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், 8ஆம்தேதி ஹைதராபாத்திலுள்ள ரெசார்ட் ஒன்றில் திருமணம் நடைபெற இருக்கிறது.

தற்போதைய சூழலை கருத்தில்கொண்டு மிகவும் ஆடம்பரமாக திருமணத்தை நடத்தாமல் மிகவும் நெருக்கமானவர்களை மட்டுமே அழைத்து திருமணத்தை நடத்த ராணா திட்டமிட்டுள்ளாராம். மேலும் புதிதாக ஒரு விதிமுறையும் அமல்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன என்றால், திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் கரோனா டெஸ்ட் எடுத்து நெகட்டிவ் வந்த பின்னரே திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பதாகும். இதனால் திருமணத்துக்கு வருபவர்கள் கரோனா பரிசோதனை செய்து வருகிறார்கள்.

raana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe