Rana Daggubati

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராணா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘காடன்’. 'விராட பர்வம்', 'பீம்லா நாயக்' உட்பட பல படங்களைக் கைவசம் வைத்துள்ள ராணா, அடுத்ததாக இயக்குநர் மிலிந்த் ராவுடன் கைகோர்த்துள்ளார். இவர், நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கியவர் ஆவார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="1d61c8f3-e894-4862-9fa6-adb33b8d1856" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_152.jpg" />

Advertisment

மிலிந்த்ராவ் - ராணா கூட்டணியில் உருவாகவுள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது. கோபிநாத் அச்சந்தா, அர்ஜூன் தஷ்யன் மற்றும் ராம்பாபு சோடிஷெட்டி இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் தொடங்கவுள்ளன. படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.