Advertisment

ராணா, மஞ்சு... நீளும் பட்டியல்; அடுத்தடுத்து வெளியாகும் ரஜினி பட அறிவிப்புகள்

Rana Daggubati on board for Thalaivar170

நெல்சன் இயக்கத்தில் வெளியாகி வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தில் கெளரவ கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்க, முதன்மை கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில், லைகா நிறுவனம் தயாரித்து வரும் லால் சலாம் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனிடையே ரஜினிகாந்த் ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் உருவாக்கவுள்ள தனது 170 வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை படக்குழு தற்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி, மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணாடகுபதி ஆகியோர் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மல்டி ஸ்டாரர் படமாக உருவாகவுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பிரபலங்களும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தைத்தொடர்ந்து சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ரஜினி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Rajinikanth TJ Gnanavel
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe