மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்த ரம்யா பாண்டியன் 

ramya pandiyan act with mammootty in nanbagal nerathu mayakkam movie

'ஜோக்கர்' படம் மூலம் அறிமுகமாகி 'ஆண் தேவதை' படத்தில் நடித்த நடிகை ரம்யா பாண்டியன் தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். இவர்கடைசியாக சூர்யாவின் 2டி என்டர்டைமென்ட்ஸ்நிறுவனம் தயாரிப்பில் வெளியான ராமே ஆண்டாளும் ராவணேஆண்டாளும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="41622c20-a2ff-4fd4-b1c1-ba83748e60f2" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_3.jpg" />

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டிநடிக்கும் 'நண்பகல் நேரத்துமயக்கம்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜல்லிக்கட்டு, அங்கமாலி டைரிஸ், ஆமென் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இப்படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் பழனி சுற்றுவட்டாரபகுதிகளில் நடந்து வருகிறது. தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை நடிகை ரம்யா பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

Mammootty ramya pandiyan
இதையும் படியுங்கள்
Subscribe