ramya pandian marry a yoga master

‘டம்மி டப்பாசு’ படம் மூலம் அறிமுகமாகி ஜோக்கர் படம் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகை ரம்யா பாண்டியன். ‘ஆண் தேவதை’, ‘இராமே ஆண்டாலும், இராவண ஆண்டாலும்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதனிடையே தனது ஃபோட்டோ ஷூட், சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலமாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisment

இந்த நிலையில் ரம்யா பாண்டியனுக்கு திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பெங்களூருவில் இருக்கும் யோகா மையத்தில் சேர்ந்தார் ரம்யா பாண்டியன். அங்கு யோகா மாஸ்டராக பணியாற்றி வந்த லவல் தவான் என்பவருடன் ரம்யா பாண்டியனுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறி தற்போது திருமணத்தில் தொடரவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இருவருக்கும் அடுத்த மாதம் 08.11.2024ஆம் தேதி உத்தராகண்ட் ரிஷிகேஷில் ஒரு கோயிலில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் பின்பு 15.11.2024 ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.