Advertisment

‘உந்தன் கை வீசிடும்… பொய் ஜாடை என்னை…’ - திருமணம் முடித்த ரம்யா பாண்டியன்

ramya pandian got marriaged

‘டம்மி டப்பாசு’ படம் மூலம் அறிமுகமாகி ஜோக்கர் படம் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகை ரம்யா பாண்டியன். ‘ஆண் தேவதை’, ‘இராமே ஆண்டாலும், இராவண ஆண்டாலும்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதனிடையே தனது ஃபோட்டோ ஷூட், சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலமாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisment

ad

இதனிடையே யோகா மாஸ்டர் லோவல் தவான் என்பவரை காதலித்து வந்தார். கடந்த ஆண்டு லோவல் தவான் பணியாற்றும் பெங்களூருவில் இருக்கும் யோகா மையத்தில் ரம்யா பாண்டியன் சேர்ந்த நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் - லோவல் தவான் இருவருக்கும் இன்று(08.11.2024) திருமணம் நடைபெற்றுள்ளது. உத்தரகாண்ட் ரிஷிகேஷ், சிவ்புரி கங்கைக்கரையில் இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில் மணமக்களின் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 15ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

Love marriage ramya pandiyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe