Advertisment

15 வருடங்கள் கழித்து... கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்...

கடந்த 1983ஆம் ஆண்டு ஒய்.ஜி. மகேந்திரன் நடிப்பில் உருவான வெள்ளை மனசு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ரம்யா கிருஷ்ணன். அப்போது அவருக்கு 14 வயது. இதன் பின்னர் படிபடியாக தெலுங்கு திரையுலகில் வளர தொடங்கினார். ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் அனைவரையும் தன் நடிப்பால் கவர்ந்தார்.

Advertisment

ramya krishnan

கடந்த 2003ஆம் ஆண்டு தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ணா வம்சியை திருமணம் செய்து கொண்ட ரம்யா கிருஷ்ணன், திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வந்தார். இந்தியாவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த பாகுபலியில் சிவகாமி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார்.

Advertisment

தற்போது இவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு படமாக அவரது கணவர் கிருஷ்ணா வம்சி இயக்க இருக்கிறார். ஏற்கனவே கிருஷ்ணா வம்சி இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 15 வருடங்கள் கழித்து வந்தே மாதரம் என்னும் படத்தின் மூலம் கணவன் மனைவி இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிகின்றனர். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ramya krishnan tolly wood
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe