
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் 'தமிழரசன்'. விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். மேலும் பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் சம்மந்தப் பட்ட காட்சிகள் மற்றும் விஜய் ஆண்டனி வில்லன் சோனு சூட் மோதும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது. அத்துடன் 1000 கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டக் காட்சிகளை 4 காமிராக்களை கொண்டு ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினார். இந்த காட்சிகள் திரையில் மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மேலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.