பிரபல நடிகையுடன் ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர்; திடீர் என்ட்ரி கொடுத்த மூன்றாவது மனைவி!

ramya attack his husband naresh babu and pavithra lokesh

பிரபல கன்னட நடிகையான பவித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக தற்போது மகேஷ் பாபுவின் சகோதரரும், நடிகருமான நரேஷைதிருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியானது.

இதனிடையே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நடிகர் நரேஷ் மூன்றாவதாக ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால்இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரம்யா ரகுபதியையும்விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார். இது குறித்துபேசிய ரம்யா தானும்கணவர் நரேஷும்பிரிவதற்கேநடிகை பவித்ரா தான் காரணம் என்றும், எங்களுக்கு இன்னும் விவாகரத்து கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில்நடிகை பவித்ராவும், நடிகர் நரேஷும்ஒரே ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர். இதனை அறிந்த நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு சென்று கதவை தட்டி கூச்சலிட்டு உள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நரேஷையும், பவித்ராவையும்பாதுகாப்பாக வெளியேற்றினர். அப்போது ரம்யா ரகுபதி இருவரையும் காலில் கடந்த செருப்பை கழட்டி அடிக்க முயன்ற நிலையில் அதனை போலீசார் குறுக்கிட்டு தடுத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பைகிளப்பியுள்ளது.

mahesh babu telugu cinema
இதையும் படியுங்கள்
Subscribe