Skip to main content

பிரபல நடிகையுடன் ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர்; திடீர் என்ட்ரி கொடுத்த மூன்றாவது மனைவி!

Published on 05/07/2022 | Edited on 05/07/2022

 

ramya attack his husband naresh babu and pavithra lokesh
நரேஷ் - பவித்ரா

 

பிரபல கன்னட நடிகையான பவித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக தற்போது மகேஷ் பாபுவின் சகோதரரும், நடிகருமான நரேஷை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. 

 

இதனிடையே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நடிகர் நரேஷ் மூன்றாவதாக ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால்  இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரம்யா ரகுபதியையும் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார். இது குறித்து பேசிய ரம்யா தானும் கணவர் நரேஷும் பிரிவதற்கே நடிகை பவித்ரா தான் காரணம் என்றும், எங்களுக்கு இன்னும் விவாகரத்து கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார். 

 

இந்நிலையில்  நடிகை பவித்ராவும், நடிகர் நரேஷும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர். இதனை அறிந்த நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு சென்று கதவை தட்டி கூச்சலிட்டு உள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நரேஷையும், பவித்ராவையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். அப்போது ரம்யா ரகுபதி இருவரையும் காலில் கடந்த செருப்பை கழட்டி அடிக்க முயன்ற நிலையில் அதனை போலீசார் குறுக்கிட்டு தடுத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்காவில் ஒலித்த தென்னிந்திய பட பாடல்

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
mahesh babu sree leela Kurchi Madatha Petti song played at NBA half time in US

மகேஷ் பாபு, ஸ்ரீ லீலா நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குண்டூர் காரம். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ். ராதா கிருஷ்ணா தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சங்கராந்தி விழாவை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி இப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.170 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே படத்தில் இடம்பெற்ற   ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பாடலில் இடம் பெற்ற நடனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. யூ-ட்யூபில் தற்போது வரை 158 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் வலம் வந்தது. 

mahesh babu sree leela Kurchi Madatha Petti song played at NBA half time in US

இந்த நிலையில் இப்பாடல் அமெரிக்கா வரை பரவியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகரில், கூடைப்பந்து விளையாட்டின் போது, மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் அதில் நடனமாடிய கலைஞர்கள், ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடலுக்கும் நடனமாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

Next Story

“இனி நீங்கதான் என் அப்பா அம்மா” - எமோஷ்னலான மகேஷ் பாபு

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
mahesh babu emotional speech in Guntur Kaaram  event

மகேஷ் பாபு, ஸ்ரீ லீலா நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குண்டூர் காரம். எஸ். ராதா கிருஷ்ணா தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சங்கராந்தி விழாவை முன்னிட்டு வருகிற 12 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இதனால் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். அப்போது மகேஷ் பாபு, ரசிகர்கள் தான் எனக்கு இனி அப்பா அம்மா என எமோஷ்னலாக பேசியுள்ளார். 

அவர் பேசுகையில், “சங்கராந்தி விழா எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். என்னை விட, என் அப்பா கிருஷ்ணாவுக்கு இது ஸ்பெஷல். என் படம் சங்கராந்திக்கு ரிலீஸ் என்றால், அது நிச்சயம் பிளாக்பஸ்டர் ஆகிடும். அது இந்த வருடமும் தொடரும். ஆனால் இந்த சங்கராந்தி எனக்கு புதிது. ஏனென்றால் என் அப்பா எங்களுடன் இல்லை. அவர் ஒவ்வொரு முறையும் எனக்கு போன் செய்து என் படத்தின் வசூல் பற்றி பேசுவார். அதை கேட்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் எப்போதும் அந்த போனுக்காக காத்திருப்பேன். 

ஆனால் இப்போது ரசிகர்களாகிய நீங்கள்தான் எனக்கு அதை சொல்ல வேண்டும். இனிமேல் நீங்கதான் என் அப்பா, நீங்கதான் என் அம்மா. நீங்கதான் எனக்கு எல்லாமே. உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் எனக்கு இருக்க வேண்டும்” என்றார். கடந்த ஆண்டு மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு, தாயார் இந்திரா தேவி மற்றும் தந்தையார் கிருஷ்ணா ஆகியோர் காலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.