“உண்மை தெரிய வேண்டும்” - பரபரப்பு சம்பவம் குறித்து ரம்யா வேண்டுகோள்

330

கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டத்தில் தர்மஸ்தலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் மஞ்சுநாதா கோயில். இந்த கோயிலில் 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தூய்மைப் பணியாளராக பணியாற்றிய ஒருவர் சமீபத்தில் தர்மஸ்தல காவல் நிலையத்தில் ஒரு அதிர்ச்சி புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், தான் வேலை பார்த்த ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளின்  உடல்களைக் கோயில் நிர்வாகத்தினரின் மிரட்டலின் பேரில் அடக்கம் செய்துள்ளதாகவும் புதைக்கப்பட்ட உடல்கள் அனைத்தும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது என்றும் கூறினார். 

மேலும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கினால் இந்த குற்றங்களைச் செய்தவர்களின் பெயர்களை வெளியிடுவேன் என்றும் உடல்களைத் தோண்டி இறப்புக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து, பெல்தங்கடி முதன்மை சிவில் நீதிபதி முன்னிலையில் புகார்தாரர் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். மேலும், அவர் ரகசியமாக தோண்டி எடுத்ததாகக் கூறப்படும் எலும்புக்கூடுகளையும் ஆதாரமாக சமர்ப்பித்தார். இதையடுத்து, பெல்தங்கடி போலீசார் அந்த எலும்புகூடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

329இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது அதிர்ச்சியளிப்பதாகக் கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை மற்றும் முன்னாள் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ரம்யா எனும் திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “தர்மஸ்தலாத்தில் பெண்கள் காணாமல் போனது மற்றும் நிறைய உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியைத் தருகிறது. அது ஒரு வழிபாட்டுத் தலம் மற்றும் கர்நாடக மக்களால் மிகவும் மதிக்கப்படுகிற ஒரு இடம். இந்த சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என நம்புகிறேன். நாம் உண்மையை அறிய வேண்டும்” என்றுள்ளார்.   

divya sapndana karnataka ramya temple
இதையும் படியுங்கள்
Subscribe