ramoji city

உலகிலேயே மிகப்பெரிய திரைப்பட ஸ்டூடியோவாக இருப்பது ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி. தற்போது இந்த ஸ்டூடியோவை டிஸ்னி நிறுவனம் மூன்று வருடங்களுக்கு பெரும் தொகையைக் கொடுத்து வாடகைக்கு எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

Advertisment

இந்தியாவில் மிகப்பெரும் வசூல் சாதனை புரிந்த படமான 'பாகுபலி' ஒன்று மற்றும் இரண்டாம் பாகம் அனைத்தும் இந்த ஸ்டூடியோவில்தான் எடுக்கப்பட்டது. அதேபோல இந்தியாவில் எடுக்கப்படம் நாற்பது சதவீத ஷூட்டிங் இங்குதான் எடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisment

இப்படி ஒரு முக்கியமான ஸ்டூடியோ பெரும் தொகைக்கு டிஸ்னி நிறுவனம் வாடகைக்கு எடுக்கக் காரணம் தொழில்நோக்கம் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் தற்போது ஓ.டி.டி. தளத்தில் நுழைந்திருக்கும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்கு இந்த ஒப்பந்தம் வலு சேர்க்கும் என்றெல்லாம் இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது.

உலகிலேயே மிகப்பெரிய ஃபிலிம் சிட்டியான ராமோஜிராவில்தான் பல இந்தியபடங்கள் எடுக்கப்படுகின்றன என்பதால் கண்டிப்பாக எவ்வளவு பெரிய தொகைக்காவும்ராமோஜிராவைவாடகைக்குக் கொடுத்திருக்க மாட்டார்கள் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisment