Skip to main content

படம் பார்த்து கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்

Published on 19/04/2022 | Edited on 19/04/2022

 

Ramiro Alanis Sets Guinness Record By Watching SpiderMan No Way Home 292 times

 

கற்பனை கதாபாத்திரங்களான சூப்பர் ஹீரோக்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கென்றே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் ஸ்பைடர் மேன் படத்திற்குக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்'. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் வசூலில் உச்சம் தொட்டு பெரும் வெற்றி பெற்றது. 

 

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் இப்படத்தை தொடர்ச்சியாக 292 முறை பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ராமிரோ அலானிஸ் என்ற இளைஞர், 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி வரை 292 முறை தொடர்ச்சியாக பார்த்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு ராமிரோ அலானிஸ் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படத்தை 191 முறை பார்த்து சாதனை படைத்திருந்தார். ஆனால் இந்த சாதனையை ஆர்ட் க்லீன் என்ற இளைஞர் 'காமெலோட்; ஃபர்ஸ்ட் இன்ஸ்டால்மென்ட்' படத்தை 209 முறை பார்த்து முறியடித்திருந்த நிலையில் தற்போது ராமிரோ அலானிஸ் 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' படத்தை 292 முறை பார்த்து தனது கின்னஸ் சாதனையை மீட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்லாம் இழந்த எலான்; குருவிக்கு ஆசைப்பட்டு கோட்டை விட்ட சோகம்

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

Elon Musk Lost Russ 15 Lakh Crore For Last Year guinness Record

 

உலக அளவில் மிகப்பெரிய சரிவை சந்தித்து உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 

 

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை கடந்த ஆண்டு தன் வசப்படுத்திக் கொண்டார். முதலில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்த நிலையில், பிறகு அந்த முடிவில் இருந்து பின் வாங்கினார். அதன் பிறகு ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு முழுமையாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். இதற்கான தொகையை செலுத்த தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளையும் விற்று வருகிறார் எலான். 

 

இந்நிலையில் 320 பில்லியன் டாலராக (ரூ.26 லட்சம் கோடி) இருந்த எலானின் சொத்துமதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும் 182 பில்லியன் டாலர் (ரூ.15 லட்சம் கோடி) சரிந்துள்ளது. இந்த மிகப் பெரிய சரிவையொட்டி உலக அளவில் பெரும் நஷ்டத்தை சந்தித்த மனிதன் என்ற வகையில் எலான் மஸ்க் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 

 

கடந்த 2000 ஆம் ஆண்டு ஜப்பான் தொழிலதிபர் மசயோஷி சன் 58.6 பில்லியன் டாலர் (ரூ.5 லட்சம் கோடி) இழப்பைச் சந்தித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற நிலையில், தற்போது அவரின் சாதனையை எலான் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை... தேடி வந்த கின்னஸ் சாதனை!

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

 84 year 84 years working in the same company ... Guinness record s working in the same company ... Guinness record

 

84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி 100 வயதைக் கடந்த முதியவர் ஒருவர் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

 

ஆண்டுக்கணக்கில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறுவது என்பது எட்டாக்கனியாக உள்ளது. அதிலும் தனியார் துறைகளில் நீண்ட வருடங்கள் பணியில் இருப்பதென்பது நிறைவேறாத ஆசையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் பிரேசிலில் 100 வயதை தொட்ட முதியவர் ஒருவர் அவருடைய வாழ்நாளில் 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி சாதனை படைத்துள்ளார். இதற்காக அவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

 

 

 84 years working in the same company ... Guinness record

 

பிரேசிலின் புரூஸ்க்யூ நகரிலுள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கடைமட்ட ஊழியராக தனது பணியைத் தொடங்கி வால்டர் ஆர்த்மன் படிப்படியாக அந்த நிறுவனத்தில் பதவி உயர்வு பெற்று விற்பனை மேலாளர் என்ற இடத்தை அடைந்தார். 100 வயதிலும் அதே உற்சாகத்துடன் அவர் பணியாற்றி வருகிறார். பணியை உற்சாகமாக ஈடுபாட்டுடன் செய்தால் ஒரே நிறுவனத்தில் நீடிக்க முடியும் என்றும் கூறியுள்ளார் வால்டர்.