csCACxxx

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,01,521 என்ற அளவிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,48,132 என்ற அளவிலும் இருக்கிறது. கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக உலக அளவில் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் அதிகபட்சமாக 17 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ளனர். அதில் இதுவரை 1 லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா தெரிந்தே கரோனா வைரஸை பரப்பிருந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சமீபத்தில் எச்சரித்தார்.

Advertisment

அதோடு மட்டுமல்லாமல் கரோனா வைரஸ் தொற்றால் சீனாவில் நிகழ்ந்த உயிரிழப்புகள் மீது தனக்குச் சந்தேகம் இருப்பதாகவும் அதிருப்தி தெரிவித்த அவர் 100 நாட்களில் இதுவரை 1 லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தற்போது அறிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் இதற்கு கருத்து தெரிவித்தசர்ச்சைக்கு பேர்போன இயக்குனர் ராம்கோபால் வர்மா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... ''எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் டொனால்டு டிரம்ப் மற்றவர்களைக் குறை கூற முயற்சிக்கிறார், மறுக்கமுடியாத உண்மை என்னவென்றால், 100 நாட்களில் 1,00,000 அமெரிக்கர்கள் இறந்தனர் என அவரது கண்காணிப்பின் முடிவு'' எனக் குறிப்பிட்டுள்ளார்.