ராம்கோபால் வர்மாவின் அடுத்த சர்ச்சை படம்  

bhairava

ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் பல படங்கள் மூலம் திரையுலகிலும், அரசியலிலும் பிரபலமானவர்களைப் பற்றி தனக்கேயுரிய பாணியில் அதிரடியான கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும் இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது அதிக பொருட்செலவில் 'பைரவா கீதா' என்ற படத்தை தயாரித்திருக்கிறார். புதுமுக நடிகர்கள் தனஞ்ஜெயா, ஈரா இணைந்து நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் தாதூலு இயக்கியிருக்கிறார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சாதிய பிரச்சினைகளின் பின்னணியில் ஆக்சன் கலந்த அழுத்தமான காதல் கதையாக தயாராகியிருக்கும் இப்படம் ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் பாடல்களையும்,ஃபர்ஸ்ட் லுக்கையும் பிரபல தயாரிப்பாளர்கள் அபிஷேக் நாமா மற்றும் பாஸ்கர் ராஷி ஆகியோர் தங்களின் அபிசேக் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார்கள். டீஸர், டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் 'பைரவா கீதா' படம் வரும் அக்டோபர் 26ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ramgopalvarma godsextruth miamalkova
இதையும் படியுங்கள்
Subscribe