Skip to main content

ராம்கோபால் வர்மாவின் அடுத்த சர்ச்சை படம்  

Published on 08/10/2018 | Edited on 08/10/2018
bhairava

 

ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் பல படங்கள் மூலம் திரையுலகிலும், அரசியலிலும் பிரபலமானவர்களைப் பற்றி தனக்கேயுரிய பாணியில் அதிரடியான கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும் இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது அதிக பொருட்செலவில் 'பைரவா கீதா' என்ற படத்தை தயாரித்திருக்கிறார். புதுமுக நடிகர்கள் தனஞ்ஜெயா, ஈரா இணைந்து நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் தாதூலு இயக்கியிருக்கிறார். 

 

 

 

சாதிய பிரச்சினைகளின் பின்னணியில் ஆக்சன் கலந்த அழுத்தமான காதல் கதையாக தயாராகியிருக்கும் இப்படம் ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் பாடல்களையும்,ஃபர்ஸ்ட் லுக்கையும் பிரபல தயாரிப்பாளர்கள் அபிஷேக் நாமா மற்றும் பாஸ்கர் ராஷி ஆகியோர் தங்களின் அபிசேக் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார்கள்.  டீஸர், டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் 'பைரவா கீதா' படம் வரும் அக்டோபர் 26ஆம் தேதி வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'லட்சுமி என்.டி.ஆர்’ படத்திற்கு தடை இல்லை...தேர்தல் கமிஷன் அனுமதி !

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

வாழ்க்கை வரலாற்று படங்களின் ட்ரெண்ட் தற்போது பிரபலாமாகி வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான என்.டி.ஆர் வாழக்கை வரலாற்று படமான 'என்.டி.ஆர்.கதாநாயகடு' மற்றும் 'என்.டி.ஆர்.மகாநாயகடு' படங்கள் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி எதிர்பார்த்த வசூல் இல்லாமல் தோல்வியடைந்தது.

 

ntr

 

இந்த படத்தில் என்.டி.ராமராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி சம்பந்தமான காட்சிகள் இல்லை. இந்த விடுபட்ட கதையை தொகுத்து ‘லட்சுமி என்.டி.ஆர்’ என்ற பெயரில் புதிய படத்தை ராம்கோபால் வர்மா இயக்கினார். இதில் என்.டி.ராமராவுக்கு சந்திரபாபு நாயுடு துரோகம் செய்து ஆட்சியை கைப்பற்றியதுபோல் காட்சிகள் உள்ளதால், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதுபோல் உள்ளது என்றும், எனவே தேர்தல் காலத்தில் திரையிட அனுமதிக்க கூடாது என்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்தனர். இதையடுத்து படத்தை பார்த்த தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தேர்தல் விதிமுறைக்கு எதிரான காட்சிகள் இல்லை என்று கூறி படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.

 

Next Story

ராம் கோபால் வர்மாவின் பாராட்டு மழையில் பட்டறை !

Published on 25/01/2019 | Edited on 25/01/2019
ram gopal

 

 

இயக்குனர் ராம் கோபால் வர்மா நடிகர் ஜே.டி. சக்ரவர்த்தியை 1996ல் வெளியான அவரது 'சத்யா' திரைப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். இந்த படம் விருதுக்கான நடிப்பை அவரிடம் இருந்து வெளிப்படுத்தியது. அப்படிப்பட்ட ராம் கோபால் வர்மாவிடம் இருந்து 'பட்டறை' படக்குழுவுக்கு பாராட்டுக்கள் கிடைத்திருக்கிறது. அவர் டீஸரில் வந்த கலர் ட்ரீட்மெண்ட் மற்றும் மாறுபாடுகளை பாராட்டியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் பீட்டர் ஆல்வின் கூறும்போது...."இது நம்ப முடியாத ஒரு தருணம், நான் அவரது படங்களைப் பார்த்து வளர்ந்தவன். குறிப்பாக சத்யா திரைப்படம் ஒரு இயக்குனராக எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த படம். அதை பற்றி விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. அவர் இந்த படத்தை பற்றி நல்ல வார்த்தைகளை கூறியதற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். பட்டறை சமுதாயத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மிக மோசமான அச்சுறுத்தலான பெண்கள் கடத்தலை பற்றி பேசும் படம்" என்றார்.  இயக்குனர் கே.வி.ஆனந்த் உடன் பணியாற்றிய இயக்குனர் பீட்டர் ஆல்வின் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். டீஸர் பற்றிய ராம் கோபால் வர்மாவின் இந்த கருத்து பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.