Advertisment

அவருக்கு "லவ் யூ" சொல்லத்தான் தோன்றுகிறது - ரமேஷ் திலக் உற்சாகம்

Ramesh Thilak  Speech at Good Night Thanks Giving Meet

குட் நைட்திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில்,ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும்விதமாக ஒரு சந்திப்பினை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. அதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ரமேஷ் திலக் பேசியதாவது: பத்திரிகையாளர்கள் கொடுத்த நல்ல விமர்சனங்கள் தான் இந்தப் படத்துக்கு உதவியது. அவர்களுக்கு நன்றி. உதவி இயக்குநர்களால் தான் இவை அனைத்தும் சாத்தியமானது. அவர்களுக்கு என்னுடைய நன்றி. நல்ல படத்தை எடுக்கும் திருப்தி போதும் என்று சொல்லி எங்களை முழுமையாக நம்பிய தயாரிப்பாளர்களுக்கு என்னுடைய நன்றி. இந்தப் படத்தை அனைவருக்கும் கொண்டு சேர்த்த சக்திவேல் சாருக்கு நன்றி. பாடலாசிரியருக்கு நன்றி. சகோதரர் ஷான் ரோல்டன் அவர்களின் இசைதான் எங்களுடைய நடிப்பை மெருகேற்றியது. அவருக்கு நன்றி.

Advertisment

ஒரு குடும்பமாகத்தான் நாங்கள் அனைவரும் இருந்தோம். மணிகண்டனை பொறுத்தவரை அவருக்கு "லவ் யூ" சொல்லத்தான் தோன்றுகிறது. பாலாஜி சக்திவேல் சார் மிகவும் ஜாலியானவர். அழுகை என்பது ஆணுக்கும் பொதுவானது தான். வினாயக்கின் எழுத்து மிகவும் ஆழமாக இருந்தது. அவருடைய எழுத்துக்கு என்னுடைய நன்றி. வீட்டில் நடக்கும் விஷயங்களை மிகவும் இயல்பாக எழுதியதற்காக இயக்குநர் வினாயக் மற்றும் கூடுதல் திரைக்கதை ஆசிரியர் மணிகண்டன் ஆகியோருக்கு நன்றி. எனக்கு இந்தப் படத்தைக் கொடுத்ததற்கு ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி.

Goodnight movie
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe