ramesh kanna about ajith father passed away

Advertisment

நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியன் (85) நேற்று அதிகாலை காலமானார். சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தந்தை மறைவால் சோகத்தில் இருக்கும் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பலரும் நேரில் சென்றோ அல்லது சமூக ஊடகங்களில் பதிவிட்டோ ஆறுதல் கூறி வருகின்றனர்.

நடிகர் விஜய், பார்த்திபன், மிர்ச்சி சிவா, சிம்பு உள்ளிட்டோர் நேரில் சென்று அஜித்திற்கு ஆறுதல் கூறியிருந்தனர். ட்விட்டர் பக்கம் வாயிலாக கமல், விக்ரம், சிம்பு, பிரசன்னா, சிம்ரன் உள்ளிட்ட பலர் ஆறுதல் கூறி பதிவிட்டிருந்தனர். மேலும் அரசியல் தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த், திருமாவளவன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பலரும் ஆறுதல் கூறி பதிவிட்டிருந்தனர்.

இதனிடையே அஜித்தின் நெருங்கிய நண்பரான நடிகர் ரமேஷ் கண்ணா அஜித்திற்கு ஆறுதல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "அஜித்தின் தந்தையார் மரணம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நான் ஊரில் இல்லாததால் வர முடியவில்லை. இது ஒரு பெரிய இழப்பு. தந்தை இழப்பு என்பது சாதாரணமான இழப்பு இல்லை. அஜித், நீ நிறைய பாதைகளைக் கடந்து பல கஷ்டங்களைக் கடந்து வந்துள்ளாய். நான் உன்னுடன் 90 காலகட்டத்திலிருந்து பயணித்து வருகிறேன். எல்லா சோதனைகளையும் சகித்து நீங்க வந்திருக்கிறீங்க. நிச்சயமாக இதுவும் ஒரு சோதனை தான். இதையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்." என்றார்.

Advertisment

ரமேஷ் கண்ணா, அஜித்தின் 'அமர்க்களம்', 'நீ வருவாய் என', 'ஆஞ்சநேயா', 'வில்லன்', 'வரலாறு', 'வீரம்' உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.