Ramcharan releases Kamal movie trailer

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழில் உருவாக்கப்பட்டு இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்து ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் தெலுங்கு ட்ரைலர் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் இந்த ட்ரைலரை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் ரன்வீர் சிங் இப்படத்தின் இந்தி ட்ரைலரை வெளியிட்டிருந்தார். இப்படத்தின் தெலுங்கு திரையரங்கு வெளியீட்டு உரிமையை 'ஸ்ரேஷ்த் மூவிஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.