Advertisment

ஷங்கரின் புதிய படம் ‘முதல்வன் 2’?

vsaa

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, கரோனா நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. கரோனா நெருக்கடி தளர்வுக்குப் பிறகு படப்பிடிப்பு நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, பல படங்களின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Advertisment

இருப்பினும், ‘இந்தியன் 2’ படத்தின் பணிகள் இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளன. இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இதில் ராம்சரன் முதல்வராக நடிக்க உள்ளதாகவும், இது ‘முதல்வன்’ படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம் எனவும் புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புவிரைவில் ஆரம்பமாகவுள்ளது.

Advertisment

director Shankar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe