Advertisment

ராம் சரண் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியீடு

ramcharan next with Uppena movie director Buchi Babu Sana

Advertisment

'ஆர்.ஆர். ஆர்', 'ஆச்சார்யா' உள்ளிட்ட படங்களைத்தொடர்ந்து தற்போது 'ஆர்சி 15' என்றபடத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க தில் ராஜு தயாரிக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ராம் சரண் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் புஜ்ஜிபாபு சனா எழுதி இயக்குகிறார்.

இந்த அறிவிப்பிற்கான போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் புஜ்ஜிபாபு சனா இதற்கு முன்னதாக 'உப்பென்னா' என்றபடத்தை இயக்கியிருந்தார். இப்படம் பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் அடுத்ததாக முன்னணி ஹீரோவான ராம் சரணுடன் கைகோர்த்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ramcharan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe