Rambo telling love to Khadija

Advertisment

'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு பிறகுவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையில் வெளியாகும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் மூன்று பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் நான்காவது பாடலான 'டிப்பம் டப்பம்' பாடல் வெளியாகியுள்ளது. இதனை யூடியூப்பில்படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதியின் ராம்போ கதாபாத்திரத்துக்கும் சமந்தாவின் கதீஜா கதாபாத்திரத்துக்கும் இடையேயான காதலை விவரிக்கும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. அந்தோணி தாசன் மற்றும் அனிருத் குரலில் வெளிவந்திருக்கும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.