Advertisment

சினிமாவில் ரீ எண்டரி கொடுக்கும் ரம்பா

rambha

Advertisment

சில ஆண்டுகளுக்கு முன் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெற்ற நடிகை ரம்பா அதன் பின் திருமணம் செய்துகொண்டு கணவர், குழந்தைகளுடன் கனடாவில் வசித்து வந்தார். அப்படியே சினிமாவையும் விட்டு ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அங்கிருந்து திரும்பி வந்த ரம்பா மறுபடியும் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். எனினும், படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் தற்போது நடிகை ரம்பா மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிடித்தமான கதைகளை தேர்வு செய்து குணச்சித்திர வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல மொழிகளில் இவர் நடிக்கவிருக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

rambha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe