Skip to main content

கரகாட்டக்காரன் 2: நோ சொன்ன ராமராஜன்... ரசிகர்கள் வருத்தம்

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடிய படங்களின் இரண்டாம் பாகம் எடுத்து வெளியிடுவது இந்தக்கால கட்டத்தின் ட்ரெண்டாக இருக்கிறது. 
 

ramarajan

 

 

அந்த வரிசையில் முப்பது வருடத்திற்கு முன்பு தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது கங்கை அமரன் உருவாக்க மும்முரமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இப்படத்தில் நடிக்க ராமராஜன் மறுத்துவிட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.
 

இதுபற்றி பேட்டியளித்துள்ள ராமராஜன் 'கரகாட்டக்காரன் 2 பற்றி எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். கங்கை அமரன் கூட கடந்த வரும் என்னிடம் பேசினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஏனெனில், ஒரு முறை கரகத்தை எடுத்தாச்சு. வச்சாச்சு. இனிமேல் அதில் கை வைத்தால் தேன் கூட்டில் கை வைத்தது போல் ஆகிவிடும். எனவே, அதில் பங்கெடுக்க விரும்பவில்லை' என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பவதாரிணி பெயரில் பணம் சுருட்டிருக்காங்க” - கங்கை அமரன் பகீர் குற்றச்சாட்டு

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
gangai amaranGanga Amaran accuses dhina saying embezzled the money with the signature of Bhavadharani

தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல், நேற்று நடைபெற்ற நிலையில் தலைவர் பதவிக்கு தினாவை எதிர்த்து போட்டியிட்ட சபேஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே கங்கை அமரன், தீனா குறித்து பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அது தற்போது இசைத்துறையில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,  “எங்க வீட்டில் ஒரு துக்க நிகழ்வு. அதனால் இளையாராஜாவால் வரமுடியவில்லை. அவர் சார்பாக நான் வந்திருக்கிறேன். இந்த யூனியன் ஆரம்பிக்கப்பட்ட போது விதியின்படி, ஒருவருக்கு 2 வருட பதவி, அதை மேலும் 2 இரண்டு வருடம் நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால் 4 முறை தலைவராக இருந்த தினா அவரது அதிகாரத்தை பயன்படுத்தி அடுத்த 4 வருஷத்துக்கும் தலைவராக வேண்டும் என அடம்பிடிக்கிறார். 

அது போக யூனியனில் நடக்கக்கூடாத பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. கொரோனா சமயத்தில் பலருக்கு உதவி பண்ணுவதாக அவர்கள் பணம் வாங்கியிருக்கிறார்கள். அதில் அவர்களாக பணம் கோரும் கடிதத்தை தயார் செய்துள்ளனர். இதில் இறந்து போன பவதாரிணியின் கையெழுத்து போட்டுக் கூட பணம் எடுத்துள்ளார்கள். ஏறத்தாழ ரூ.80 லட்சத்துக்கும் மேல் சுருட்டியுள்ளனர். அந்த கணக்கெல்லாம் எங்கு தெரிந்துவிடுமோ என்பதற்காக மீண்டும் தலைவராக வர தினா முயற்சிக்கிறார்” என்றார். 

மேலும் இளையாராஜா கூறியும் தினா மறுத்துவிட்டதாக சொன்ன கங்கை அமரன், “இளையராஜா தினாவிடம் ஒரு ஆளுக்கு 4 வருஷம் தான் பதவி, நீ பண்றது சரியில்லை... என சொன்ன போது, அந்தாளு சும்மா உக்காந்து கத்திக்கிட்டு இருப்பான்... என பேசினார்” என்றார். மேலும் இளையராஜா பேசிய ஆடியோவையும் வெளியிட்டார்.

Next Story

“புரட்சித்தலைவர் - நடிகர் திலகம்னு வச்சுக்கோங்க...” - சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

gangai amaran answer about superstar designation 

 

சென்னையில் நடந்த ‘மேகத்தில் ஒன்றாய் நின்றோமே’ ஆல்பம் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கங்கை அமரன் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலா பற்றியும் பாஜகவில் சேர்ந்தது குறித்தும் திமுகவில் சேரப்போகிறீர்களா என்றும் கேள்விகள் முன் வைக்கப்பட்டது. மேலும் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பல்வேறு திரைப் பிரபலங்கள் கூறி வருகிற கருத்துக்களுக்கு தங்களுடைய கருத்து என்னவென்று கேள்விகள் கேட்கப்பட்டது. கலவையான கேள்விகளுக்கு அவரது பதில் பின்வருமாறு...

 

ஒரே கங்கை அமரன் தான் இந்த ஜென்மத்தில் சேர்ந்தது ஒரே கட்சியில்தான். அந்த கட்சியில் தான் உயிர் போகுற வரை இருப்பேன். நம்மை நாமே உணர்வதால், நான் கத்துவதால் எந்த பயனும் இல்லை என்று இனிமேல் அமைதியாகவே போய்விடுவேன். தனியார் ஊடகங்களின் பேட்டியின் போது என்னை அவதூறாகப் பேசியதால் கோவப்பட்டேன். கோவம் வர வேண்டிய இடத்தில் வந்தால்தான் மனிதன். சசிகலா சொத்து குவிப்பு வழக்கிற்காகத்தான் தண்டனை அனுபவித்து வந்துவிட்டார்கள் அவர்கள் குறித்து பேச வேறு ஒன்றுமில்லை.

 

கலைஞர் உயிருடன் இருந்தபோது அந்த குடும்பத்திற்கும் எங்களுக்கும் நெருக்கமான உறவு இருந்தது. தொடர்பு, உறவு என்பது வேறு கட்சி என்பது வேறு. மற்றபடி நான் எப்போதும் திமுகவில் இருந்ததில்லை. இனி சேரப்போவதுமில்லை. தெய்வீக நம்பிக்கை அதிகம் என்பதால் அதை சார்ந்த கட்சியான பாஜகவில் இருக்கிறேன்.

 

சூப்பர் ஸ்டார் பட்டம் இனி இவருக்குத்தான் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஏன் இருக்குறவங்க பட்டத்திற்கு ஆசைப்படுகிறீர்கள். இல்லாதவங்க பட்டத்தை எடுத்துக்கங்களேன். புரட்சித்தலைவர், நடிகர் திலகம் எல்லாம் இப்போது இல்லை. அந்த பட்டத்தை எடுத்து வைத்துக்கொள்ளுங்களேன் பார்க்கலாம் என்று அவருக்கே உரித்தான மாடுலேசனில் பேசினார்.