Advertisment

நடிகர் ராமராஜனுக்கு என்னதான் ஆச்சு..?

bhfdhdetjd

சினிமாவைவிட்டு விலகி ஓய்வில் இருக்கும் பல நடிகர்களின் உடல் நலம் குறித்து அவ்வப்போது போலியான வதந்திகள் இணையத்தில் உலா வந்த வண்ணம் இருக்கும் நிலையில், தற்போது இந்த லிஸ்ட்டில் நடிகர் ராமராஜனும் இணைந்துள்ளார். சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நடிகர் ராமராஜனின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது புதிய தகவல்கள் பரவிவருகின்றன. இந்த செய்தியால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இதுகுறித்து ராமராஜன் தரப்பில் விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்..

Advertisment

"வதந்திகளை நம்ப வேண்டாம் -

வசூலில் சாதனை புரிந்து தமிழ் சினிமா வரலாற்றில் சரித்திரம் படைத்த 'கரகாட்டக்காரன்' படம் மட்டுமல்ல, பல நூறு நாட்கள் படங்களை தந்து தனக்கென ஒரு பாணியில் வலம் வந்தவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான மக்கள் நாயகன் ராமராஜனை பற்றி தற்சமயம் தவறான வதந்தியை பரப்பிவருகிறார்கள். திரு.ராமராஜன் அவர்கள் பூரண நலத்துடன் இருக்கிறார். யாரும் இந்த வதந்தியை நம்பவேண்டாம். இரண்டு படங்களுக்கு தனது கதையை தந்துள்ள ராமராஜன் அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார் என்பதே உண்மை. ராமராஜன் உடல்நலத்துடனும் மனவலிமையுடனும் இருக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் பட துவக்க விழாவில் கலந்துகொள்வார்" என குறிப்பிட்டுள்ளனர்.

Advertisment

ramarajan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe