Skip to main content

'எனக்கு கரகாட்டக்காரன் 2ல் உடன்பாடு இல்லை' - ராமராஜன்  

Published on 24/06/2019 | Edited on 24/06/2019
Ramarajan

 

 

கரகாட்டக்காரன் படத்தின் 30வது ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கங்கை அமரன் அறிவித்தார். இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து இப்பட நாயகன் ராமராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியபோது... "கரகாட்டக்காரன் 2 பற்றி என்னிடமும் கங்கை அமரன் பேசினார். ஆனால், எனக்கு அதில் உடன்பாடு இல்லை. சில வி‌ஷயங்களை திரும்ப தொடக்கூடாது. திரும்ப தொட்டால் சரியாக வராது. பொதுவாக, இந்த ‘பார்ட் டூ’ல எனக்கு உடன்பாடு கிடையாது. சில வி‌ஷயங்களை ‘பார்ட் டூ’ பண்ணக்கூடாது" என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தனிமை; மன வேதனை; பாழடைந்த வீடு' - நடிகை கனகாவின் பரிதாப நிலை

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

'Loneliness; Heartbreak; house full of garbage'-actress Kanaka's plight

 

தமிழில் 'கரகாட்டக்காரன்', 'அதிசய பிறவி', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை கனகா. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகத் திரையுலகிலிருந்து விலகியிருக்கும் கனகா, சென்னை  ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.  

 

திரைப்படத்தில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் அப்பாவுடன் சொத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை, கை கூடாத காதல் எனப் பல பிரச்சனைகளால் வீட்டில் முடங்கிய நிலையிலேயே இருந்துள்ளார் கனகா. இதனால் பல வருடங்களாக அவர் தனிமை வாழ்க்கையே வாழ்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியே முகம் காட்டாத அளவிற்குத் தனிமை அவரை ஆட்கொண்டுவிட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை தீயணைப்புத் துறைக்கு வந்த அழைப்பில் நடிகை கனகாவின் வீட்டிலிருந்து அதிகப்படியான புகை வெளியேறுவதாகப் புகார் அளிக்கப்பட்டது.

 

'Loneliness; Heartbreak; house full of garbage'-actress Kanaka's plight

 

அதனைத் தொடர்ந்து கனகாவின் வீட்டிற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் கனகாவோ வீட்டிற்குள் நுழைய தீயணைப்பு வீரர்களை அனுமதிக்க மறுத்ததோடு, அவர்களைத் திட்டியுள்ளார். பின்னர் நீண்ட நேரத்திற்குப் பிறகு உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்பொழுது வீட்டிற்குள் சென்றபோது சிதறிக் கிடக்கும் குப்பைகள், குவியல் குவியலாகத் துணி மூட்டைகள், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு போடப்பட்ட குப்பைகள் எனக் கேட்பாரற்று வீடு கிடந்துள்ளது. பாழடைந்த நிலையில் இருந்த வீட்டில் அவர் எப்படி வசித்து வந்தார் என எண்ணத் தோன்றும் அளவிற்கு வீட்டின் நிலைமை இருந்ததாகக் கூறப்படுகிறது. அதுவும் எப்பொழுதும் வெளியே முகம் காட்டாத கனகா அன்றுதான் வெளியே வந்தார் என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

 

 

Next Story

23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் எவர்க்ரீன் கூட்டணி

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

after 23 years ilaiyaraja composing music for ramarajan movie samaniyan

 

80களில் 'எங்க ஊரு காவல்காரன்', 'கரகாட்டக்காரன்', 'தங்கமான ராசா' என பல ஹிட் படங்களைக் கொடுத்து டாப் ஹீரோவாக வலம் வந்தவர் ராமராஜன். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகிய ராமராஜன் தற்போது 'சாமானியன்' படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படத்தை ராகேஷ் இயக்க ராதாரவி மற்றும் எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மதியழகன் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. 

 

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராமராஜன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இது தொடர்பாக இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளது படக்குழு. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

இவர்கள் கூட்டணியில் வெளியான 'செண்பகமே...செண்பகமே', 'சொர்கமே என்றாலும்...', 'மதுர மரிக்கொழுந்து...' உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பிளே லிஸ்டில் உள்ளது. அதிலும் சில பாடல்கள் ராமராஜன் குரலுக்கு இளையராஜாவின் குரல் அப்படியே பொருந்தியிருக்கும். இப்படி நீங்கா நினைவுகளாகப் பல பாடல்களைத் தந்த இந்த எவர் க்ரீன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.