விஜய் டிவி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் ராமர். லக்ஷ்மி ராமகிருஷ்ணனை போல சட்டைர் செய்து இவர் நடித்த காமெடி நிகழ்ச்சி மிகவும் வைரலானது. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று இவர் பேசியது மிக வைரலாக என்னம்மா ராமர் என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இதன்பின் ஆத்தாடி என்ன உடம்பு என்ற பழைய பாடலை இவரது மாடுலேஷனில் பாட அதுவும் வைரலாக தொடங்கியது. இவரின் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் மிகவும் பிரபலமடைய, அடுத்து சினிமாக்களில் சிறு சிறு தோற்றங்களில் காமெடியனாக வந்து அசத்திக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் ராமர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அப்படத்தை நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மணி ராம் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் ராமருக்கு ஜோடியாக சஞ்சனா கல்ராணி நடிக்கிறார். நிக்கி கல்ராணியின் சகோதரியான இவர், அருண் விஜய்யின் ‘பாக்ஸர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். தமிழில் இது இவருக்கு இரண்டாவது படம். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.