'டாக்டர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த படம்டான். இப்படத்தில்கதாநாயகியாகப்பிரியங்கா மோகன் நடிக்க, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள்இப்படத்தைத்திரையரங்குகளில் கொண்டாடினர். சமீபத்தில்இப்படத்தைப்பார்த்த ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை நேரில்அழைத்துப் பாராட்டியிருந்தார்.
இந்நிலையில்பாமக நிறுவனர் ராமதாஸ்டான்படத்தைப்பார்த்துவிட்டுப்பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டட்விட்டர்பதிவில், “நடிகர் சிவகார்த்திகேயன் நடித்தடான்படம் பார்த்தேன்,‘பெற்றோரை அவர்கள் இருக்கும் போதேகொண்டாடுங்கள்’ என்றபாடத்தைச்சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன்நன்றி தெரிவித்துள்ளார்.