ramadoss biopic update

நீண்ட இடைவெளிக்குப்பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சேரன், ஜர்னி என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். கடந்த 12 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியான இந்த சீரிஸ் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையடுத்து பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். சத்ய ஜோதி தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில், சேரன் இயக்கும் புதியபடம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ்வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment