ramadoss

Advertisment

'காலா' படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் டேராடூனில் ஆரம்பித்த இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அங்கேயே 30 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது முண்டாசுப்பட்டி புகழ் 'முனிஷ்காந்த்' என்ற காமெடி நடிகர் ராமதாஸ் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.