Skip to main content

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ராம் பொத்தினேனி படம்

 

ram pothineni Boyapati RAPO update

 

போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'போயபதி ராபோ' (BoyapatiRAPO). ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் பவன் குமார் வழங்குகிறார்கள். படத்தொகுப்பை தம்முராஜு கையாண்டுள்ளார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மைசூரில் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. இந்த ஷெட்யூலில், ஆக்‌ஷன் காட்சியும் ஒரு பாடலும் படமாக்கப்பட உள்ளது. ஒரு பாடலைத் தவிர படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் இந்த ஷெட்யூலுடன் முடிந்துவிடும். மைசூர் விமான நிலையத்திலிருந்து ராம் மற்றும் ஸ்ரீலீலாவின் கேண்டிட் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

 


 

மிஸ் பண்ணிடாதீங்க