ram nivin pauly movie title announcement released

இயக்குநர் ராம் இயக்கத்தில் கடைசியாக மம்மூட்டி நடிப்பில் 'பேரன்பு' படம் வெளியானது. இதனை தொடர்ந்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்க சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முன்னதாகவே நிறைவடைந்து தற்போது அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி 'ஏழு கடல் ஏழு மலை' என இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த டைட்டில் வீடியோவில் "காதல்னு வந்துட்டா மனசு மட்டும் அல்ல, உடம்பு உயிர் எல்லாம் பறக்கும்" என்று ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது. இதனை பார்க்கையில் காதலை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது போல் தெரிகிறது. நீண்ட நாள் கழித்து இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment