தன் படங்கள் மூலமும், அதிரடியான கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் மூலமும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் இயக்குனர் ராம் கோபால் வர்மா கரோனா வைரஸ் குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு மீண்டும்சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Advertisment

cvzc

உலக முட்டாள்கள் தினமான நேற்று தன் ட்விட்டர் பக்கத்தில், ''தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் கூறியுள்ளார்'' என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் ''தனக்கு கரோனா தொற்று இல்லை என்றும், டாக்டர் தன்னிடம் பொய் சொல்லி ஏப்ரல் ஃபூல் ஆக்கிவிட்டார். இதில் தன்னுடைய தவறு எதுவும் இல்லை என்று மீண்டும் பதிவிட்டு ரசிகர்களை எரிச்சலடைய செய்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் அவரை திட்டித் தீர்த்து, கிண்டலடித்து மீம்ஸ் போட்டனர். பின்னர் இதை பார்த்த ராம் கோபால் வர்மா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.