rgv

இயக்கும் படங்களிலிருந்து, பதிவிடும் சமூக வலைத்தள பதிவுகள்வரை மார்க்கெட்டிங் யுக்திக்காக சர்ச்சையாகவே பேசுபவர், பதிவிடுபவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ்திரையுலகில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர்.

Advertisment

Advertisment

தற்போது பார்ன் ஸ்டார் நடிகை மியா மல்கோவாவை வைத்து க்ளைமேக்ஸ் என்றொரு படத்தை இயக்கியுள்ளார். கரோனாவுக்கு முன்பே ஷூட்டிங் இறுதிக்கட்ட பணிகளை முடித்துவிட்ட ராம்கோபால் வர்மா, படத்தைத் தனது இணையத்தளத்தில் சமீபத்தில் ரிலீஸ் செய்தார். இதனைத் தொடர்ந்து 'நேக்ட்' என்ற தலைப்பில் படமெடுக்கதிட்டமிட்டு, போஸ்டர் ரிலீஸ் செய்திருக்கிறார் ராம்கோபால் வர்மா.

இந்நிலையில் ஓ.டி.டி. பிளாட்ஃபார்மிற்கு ஆதரவாகப் பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் ராம் கோபால் வர்மா. அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில், “நான் எனது 'க்ளைமேக்ஸ்' திரைப்படத்தைசொந்த இணையத்தளத்தில் வெளியிட்டேன். என்னைப் பிடிக்கும் என்பவர்கள், நான் எடுக்கும் சினிமா பாணி பிடிப்பவர்கள் என அவர்கள் மட்டுமே வரப்போகிறார்கள். அவர்களுக்காக எனது (இணையத்தள) திரையரங்கில் நேரடியாகப் படத்தைத் திரையிடுகிறேன். எனது படத்தை ஒரு நாளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பணம் கொடுத்துப் பார்த்திருக்கிறார்கள். இத்தனைக்கும் எங்கள் தளத்தில் சில பிரச்சினைகள் வந்து என் படத்தின் கள்ளப் பிரதி சில இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டுவிட்டது. அப்படியுமே நான் நிர்ணயித்த டிக்கெட் விலைக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள் என்றால் திரையரங்கு எதற்கு. அதற்கு அர்த்தம் என்ன?

அடுத்து 'நேக்ட்' என்ற படத்துக்கான டிக்கெட் விலையை 200 ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறேன். அதன் மதிப்பு 200 ரூபாயா, 100 ரூபாயா, 50 ரூபாயா என்பதை யார் முடிவு செய்ய வேண்டும்? பிடித்திருந்தால் மக்கள் வாங்குவார்கள், இல்லை வாங்க மாட்டார்கள், அவ்வளவுதானே.