/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/88_32.jpg)
தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி இயக்குநராக இருக்கும் ராம் கோபால் வர்மா சூர்யா நடிப்பில் வெளியான ரத்த சரித்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார். இவர் தற்போது காதல் காதல்தான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அப்சரா, நைனா கங்குலி இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லெஸ்பியன் ஜோடி பற்றி த்ரில்லர் கதை படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 8 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா அடுத்ததாகப் பிரபல மல்யுத்த வீரர் கிரேட் காளியை வைத்து புதிய படம் ஒன்று இயக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. காதல் காதல்தான் படத்தின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. அப்போது க்ரேட் காளியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ராம் கோபால் வர்மா அதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இப்புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ராம் கோபால் வர்மா அடுத்தாக க்ரேட் காளியை இயக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டது. இது தொடர்பாக சினிமா வட்டாரங்களிடம் விசாரித்த போது, இத்தகவல் உண்மையில்லை என்றும், இது வெறும் வதந்திதான் என்றும் கூறினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)