
கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், இயக்குனர் ராம் கோபால் வர்மா 'க்ளைமேக்ஸ்' என்றொரு படத்தை புது தளத்தின் மூலம் நேரடி டிஜிட்டல் ரிலீஸாக வெளியிட்டார்.
தற்போது இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘நேக்டு நங்கா நக்னம்’ என்றொரு படத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான அவரது க்ளைமாக்ஸ் படம் ஷ்ரேயாஸ் ஈடியில் முதன்முறையாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ATT (Any Time Theatre) தளம் ஷ்ரேயாஸ் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஏ.டி.டி. தளம், வெறும் 50,000 பார்வைகளை மட்டுமே எதிர்பார்த்தது, ஆனால் பிரம்மாண்டமான 2,75,000 லாகின்களும், 1,68,596 கட்டணம் செலுத்திய பார்வைகளும் படம் வெளியான 12 மணி நேரத்தில் கிடைத்தன. ஒட்டுமொத்தமாக 2,89,565 பார்வைகள் கிடைத்துள்ளது.
'க்ளைமாக்ஸ்' படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமான 'நேக்டு நங்கா நக்னம்' படத்தை இதே தளத்தில வரும் ஜூன் 27 அன்று வெளியிடவுள்ளார்.
'நேக்டு நங்கா நக்னம்', ஏ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியாகும் இரண்டாவது ராம்கோபால் வர்மா திரைப்படமாகும். இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்படுகிறது. இந்தத் தளத்தில் 5 மொழிகளில் வெளியாகும் முதல் படமும் இதுவே ஆகும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)