உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 66 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 743 லிருந்து 748 ஆக அதிகரித்துள்ளது. இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் எந்தப் பிரச்சனை வந்தாலும் அதுகுறித்து சர்ச்சையாகவோ அல்லது கிண்டலாகவோ கருத்து சொல்வது இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் வழக்கம். அந்த வகையில் கரோனா குறித்து கிண்டலாக ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், "ஏதோ ஒரு மனைவிதான் இந்த வைரஸ் கிருமியை அனுப்பும்படி கடவுளிடம் வேண்டியிருக்கிறார் என நான் சந்தேகிக்கிறேன். ஏனென்றால் விளையாட்டுப் போட்டிகள் ரத்து, பார்கள் மூடல், நண்பர்களுடன் கூடுவது ரத்து, அலுவலக வேலை இருக்கிறது எனப் பொய் சொல்ல முடியாது, முக்கியமாக மனைவியுடன் மட்டுமே நேரத்தைச் செலவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.