ram gopal varma Dangerous movie postponed

Advertisment

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி இயக்குநராக இருக்கும் ராம் கோபால் வர்மா சூர்யா நடிப்பில் வெளியான ரத்த சரித்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார். இவர் தற்போது காதல் காதல்தான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அப்சரா, நைனா கங்குலி இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.லெஸ்பியன் ஜோடி பற்றி த்ரில்லர் கதை படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாக இருந்தது. ஆனால் இப்படம் இன்று வெளியாகவில்லை.

இது குறித்து படத்தின் இயக்குநர் ராம் கோபால் வர்மா கூறுகையில், "சில திரையரங்குகள் இப்படத்தை லெஸ்பியன் படம் என்று கூறி திரையிட மறுத்துள்ளன. இந்திய துறையில் ஆணும் பெண்ணும் காதலிப்பதாக நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகிறது. அதே போலதான் நான் பெண்ணும் பெண்ணும் காதலிப்பது போன்றுதான்படம் எடுத்தான். ஓரின திருமணம் குறித்து உச்சநீதிமன்றமேதீர்ப்பளித்துள்ளது. ஆணும் பெண்ணும் முத்தமிடுவது எப்படி சகஜமோஅப்படித்தானேபெண்ணும் பெண்ணும் முத்தமிடுவதும். அதனால் என் படத்தின்முத்தக்காட்சிகளைவைத்தேன். இதை செக்ஸ் சினிமா என்று கூறி வெளியிட மறுக்கிறார்கள். இதனால் படத்திற்கு போதிய திரையரையரங்குகள் கிடைக்காததால், படத்தை வெளியிட முடியவில்லை. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும்" என கூறியுள்ளார்.