/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ram gopal varma_1.jpg)
சர்ச்சைகளுக்குப்பஞ்சமில்லாத இயக்குனர் ராம் கோபால் வர்மா, தன்னுடைய சினிமா பயணத்தின் தொடக்கத்திலிருந்து தனக்கென ஒரு உக்தியைக் கையாண்டு இந்தியா சினிமாவில் ட்ரெண்ட் செட்டராகத் திகழ்கிறார்.
தற்போது இவரது இயக்கத்தில் பிரபல பார்ன் நடிகை மியா மல்கோவா நடித்து வெளியாக இருக்கும் படம் க்ளைமேக்ஸ். சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று இப்படத்தின் ட்ரைலர் மற்றும் படம் எப்போது வெளியாகிறது என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “கடவுளை மறந்துவிடுங்கள், கரோனாவால் கூட என் பட ரிலீஸைத் தடை செய்ய முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், வரும் 29ஆம் தேதி காலை 11 மணிக்குப் புதிய ஆப் மூலம் படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக ராம் கோபால் வர்மா பார்ன் நடிகை மியா மல்கோவாவை வைத்து காமம் குறித்த ஒரு ஆவணப்படத்தை ரிலீஸ் செய்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us