Skip to main content

”என் பட ரிலீஸை கரோனாவால் கூட தடை செய்ய முடியாது”- ராம் கோபால் வர்மா

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

rgv


சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாத இயக்குனர் ராம் கோபால் வர்மா, தன்னுடைய சினிமா பயணத்தின் தொடக்கத்திலிருந்து தனக்கென ஒரு உக்தியைக் கையாண்டு இந்தியா சினிமாவில் ட்ரெண்ட் செட்டராகத் திகழ்கிறார்.
 


தற்போது இவரது இயக்கத்தில் பிரபல பார்ன் நடிகை மியா மல்கோவா நடித்து வெளியாக இருக்கும் படம் க்ளைமேக்ஸ். சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து நேற்று இப்படத்தின் ட்ரைலர் மற்றும் படம் எப்போது வெளியாகிறது என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “கடவுளை மறந்துவிடுங்கள், கரோனாவால் கூட என் பட ரிலீஸைத் தடை செய்ய முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், வரும் 29ஆம் தேதி காலை 11 மணிக்குப் புதிய ஆப் மூலம் படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக ராம் கோபால் வர்மா பார்ன் நடிகை மியா மல்கோவாவை வைத்து காமம் குறித்த ஒரு ஆவணப்படத்தை ரிலீஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

37 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டம் பெற்ற சர்ச்சை இயக்குநர்; ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

ar rahman congrats Ram Gopal Varma for he receives his B. Tech degree after 37 years

 

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் ராம் கோபால் வர்மா. இவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிடுவது மற்றும் நிகழ்ச்சிகளில் நடந்துகொள்வது அவ்வப்போது சர்ச்சைகளாக மாறும். சமீபத்தில், ராஜமௌலி மீது இந்தியாவில் உள்ள சினிமா தயாரிப்பாளர்கள் பலரும் பொறாமையில் உள்ளதாகவும் அவரை கொலை செய்ய ஒரு குழுவாக திரண்டுள்ளதாகவும் பதிவிட்டிருந்தார். 

 

இதனிடையே ஒரு டேஞ்சரஸ் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அந்த படத்தில் நடித்த நடிகையின் கால் விரலை கடித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு படித்து முடித்த படிப்பின் சான்றிதழை வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நான் தேர்ச்சி பெற்று 37 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று எனது பி.டெக் பட்டம் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 1985 ஆம் ஆண்டில் சிவில் இன்ஜினியரிங் படிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லாததால் அதனை எடுக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

பட்டம் வாங்கியுள்ள ராம் கோபால் வர்மாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.  


 

Next Story

“ராஜமௌலியை கொலை செய்ய ஒரு குழு திரண்டுள்ளது” - சீக்ரெட் சொன்ன சர்ச்சை இயக்குநர்

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

ram gopal varma about rajamouli

 

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் கோல்டன் குளோப் விருது நிகழ்வில் சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு’ பாடலுக்காக விருதைப் பெற்றது. அந்த விழாவின்போது பிரபல ஹாலிவுட் இயக்குநர்கள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்டவர்களை ராஜமௌலி சந்தித்து கலந்துரையாடும் காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாயின.

 

உலக அளவில் பல திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த இயக்குநராக இருக்கும் ராஜமௌலிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சர்ச்சைக்கு பிரபலமான இயக்குநர் ராம் கோபால் வர்மா ராஜமௌலி குறித்து தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். ராஜமௌலி ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தாதா சாஹப் பால்கே முதல் இன்று வரை இந்திய சினிமா வரலாற்றில் ராஜமௌலி உட்பட யாரும் இந்த தருணத்தை ஒரு இந்திய இயக்குநர் கடந்து செல்வார் என்று நினைத்துப் பார்த்திருக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

 

மேலும் மற்றொரு பதிவில், "ராஜமௌலி, தயவு செய்து உங்களின் பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள். ஏனென்றால் இந்தியாவில் உள்ள சினிமா தயாரிப்பாளர்கள் பலரும் உங்கள் மீது பொறாமையில் உள்ளனர். அவர்கள் உங்களை கொலை செய்ய ஒரு குழுவாக திரண்டுள்ளனர். அந்த குழுவில் நானும் ஒரு அங்கம் தான். இந்த ரகசியத்தை நான் இப்போது வெளியில் சொல்கிறேன்" எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.