Advertisment

“எதுவுமே செய்வதில்லை” - ரஜினியை விமர்சித்த பிரபலம்

ram gopal varma about rajinikanth

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் ராம் கோபால் வர்மா. இவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிடும் பதிவு, நிகழ்ச்சிகளில் நடந்துகொள்ளும் விதம் மற்றும் பல விஷயங்களில் கூறும் கருத்துகள் சலசலப்பையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

அந்த வகையில் தற்போது ரஜினி குறித்து அவர் கூறிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் , “நடிப்பு என்பது ஒரு கதாபாத்திரத்தைச் சார்ந்தது. ஆனால் ஸ்டார் நடிகர்கள் அவர்களுடைய நடிப்பை சார்ந்திருக்கிறார்கள். இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா எனக் கேட்டால் எனக்கு தெரியவில்லை. ரஜினிகாந்த் ஒரு பிகு மத்ரே கதாபாத்திரம் போல் நடிக்க முடியாது” என்றார். பிகு மத்ரே கதாபாத்திரம் அவர் இயக்கிய சத்யா படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம். அதில் மனோஜ் பாய் நடித்திருந்த நிலையில் அது அவருக்கு பிரபலத்தை தேடி தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ram gopal varma about rajinikanth

இதை தொடர்ந்து பேசிய அவர், “ஸ்லோ மோஷன் இல்லாமல் ரஜினிகாந்த் இப்போது வரை இருந்திருக்க முடியுமா எனத் தெரியவில்லை. அப்படி நடப்பதை அவரது ஆடியன்ஸ் விரும்புகிறார்கள். பாதி படம் வரை அவர் எதுவுமே செய்வதில்லை. ஸ்லோ மோஷனில் மட்டும் நடந்து வருகிறார். அதை பார்ப்பது உங்களுக்கு பிரச்சனையில்லை. அதுவே உங்களுக்கு ஒரு உயர்ந்த உணர்வை தருகிறது. ஒரு ஸ்டார் நடிகர் சாதாரணமான கதாபாத்திரத்தில் நடிக்கும் போது ஆடியன்ஸுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும். ரஜினியை கடவுளாக பார்ப்பதால் அவர்களால் சாதாரண கதாபாத்திரங்களைப் பண்ண முடிவதில்லை ” என்றார். இதே போல் அமிதாப் பச்சனையும் இந்த பேடியில் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது பேச்சு தற்போது ரஜினி ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actor Rajinikanth ram gopal varma
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe