ram gopal varma

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இன்று தனது 37 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனால் அவருடைய ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பிரபலங்களும் அவர் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisment

Advertisment

முன்னதாக ஆர்.ஆர்.ஆர். படக்குழு, ஜூனியர் என்.டி.ஆர். பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் டீஸர் எதுவும் வெளியிடப்போவதில்லை என அறிவித்துவிட்டது. லாக்டவுன் நடைபெறுவதால் தங்களால் எந்த வீடியோவையும் திட்டமிட்டு அதைச் செயல்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் நடிகர் என்.டி.ஆர். தன்னுடைய ஃபிட்டான உடல் அமைப்பைக் காட்டுவதுபோல போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த சிக்ஸ் பேக் போட்டோ வைரலாகி வருகிறது.

சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில், “ஹேய் தாரக் நான் ஒரு கே(ஒரினச் சேர்கையாளர்) இல்லை என்பது உனக்குத் தெரியும் ஆனால் அப்படி ஆகிவிடலாம் என்று இந்தப் புகைப்படத்தில் உன்னைப் பார்த்தபின்பு தோன்றுகிறது. என்ன மாதிரி உடலமைப்பு நைனா” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.