Ram Charan visits dargah in Kadapa regards ar rahman request

இந்திய அளவில் அறியப்படும் நடிகராக இருக்கும் தெலுங்கு நடிகர் ராம் சரண், தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்துமுடித்துள்ளார். வாரிசு படம் மூலம் தமிழில் பிரபலமான தயாரிப்பாளர் தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். கியாரா அத்வானி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தை அடித்து புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ராம் சரண். இப்படத்தின் ப்ரீ புரொடைக்‌ஷன் பணிகள் முடிந்து படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ஆந்திரா கடப்பாவில் உள்ள தர்காவில் 80வது தேசிய முஷைரா கஜல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மான் இந்த தர்காவிற்கு செல்லும்படி ராம் சரணிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் கோரிக்கையின் அடிப்படையில் ராம் சரண் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதே கடப்பா பகுதியில் உள்ள ஸ்ரீ விஜய துர்கா தேவி கோயிலுக்கு சென்று ராம் சரண் வழிபட்டார்.

Advertisment

Ram Charan visits dargah in Kadapa regards ar rahman request

ராம் சரணுடன் இயக்குநர் புச்சி பாபு சனாவும் சென்றிருந்தார். ராம் சரண் வரும் செய்தியை அறிந்த ரசிகர்கள் அப்பகுதியில் அதிகளவில் திரண்டு விட்டனர். அவர்களை கட்டுப்படுத்த போலீஸார் தடி அடியும் நடத்தினர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலும் சிறிது பரபரப்பையும் ஏற்படுத்தியது.