Advertisment

பிரபல நடிகருக்கு கரோனா... வருத்தத்தில் ரசிகர்கள்!

Ram Charan

Advertisment

கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கரோனா வைரஸ், இன்று உலகையே அச்சுறுத்தக் கூடிய ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஏறக்குறைய ஓராண்டுகளைக் கடந்துவிட்டாலும் இதன் தாக்கம் மற்றும் பாதிப்பின் வீரியம் குறைந்தபாடில்லை. இவ்வைரசுக்கு எதிரான தடுப்பூசி ஆய்வு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் மக்களை கூடுதல் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகரான ராம் சரணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த அறிகுறியும் இல்லை. தற்போது என்னைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கிறேன். விரைவில் குணமடைந்து வலிமையாக மீண்டு வருவேன் என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த இரு நாட்களாக என்னுடன் இருந்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்ட அவர், தனது உடல்நலம் குறித்த கூடுதல் தகவல்களைவிரைவில் கூறுவதாகவும்தெரிவித்துள்ளார்.

Advertisment

இதனையடுத்து, ராம் சரண் விரைவில் குணமடைய வேண்டுமென அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe