/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/480_16.jpg)
ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்ஜர் படத்திற்கு பிறகு ராம் சரண் 'உப்பென்னா ' பட இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். இப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது.
இந்த நிலையில் இன்று ராம் சரணின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு பெடி( PEDDI) என தலைப்பிடப்பட்டுள்ளது. போஸ்டரில் ராம் சரண் மாறுபட்ட தோற்றத்தில் இடம் பெற்றுள்ளார்.
இப்படத்தில் ராம் சரணுடன் கன்னட முன்னணி நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ,ஜெகபதி பாபு ,திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)