Skip to main content

தமிழ் சினிமாவை குறிவைத்த ராம் சரண் தேஜா !

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
vvr

 

 

தெலுங்கு நடிகர் ராம் சரண் நாயகனாக நடிப்பில் மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட "வினயை விதேயா ராமா" தமிழில் வெளியாகிறது. பிரபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு  இப்படத்தை இயக்குகிறார். 'பாரத் என்னும் நான்' என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓப்ராய் வில்லனாகவும் நடிக்கிறார்கள். மேலும் பிரசாந்த், சினேகா, மதுமிதா, முகேஷ் ரிஷி, ஜெபி, ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு, அரசியல், செண்டிமெண்ட், வன்முறை, சாஹசம், என்று பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட படமாக "வினயை விதேயா ராமா" உருவாகியுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ரிஷி பஞ்சாபி, பண்டி ரமேஷ் ஆகியோர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் பாடல் காட்சிகள்  பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டும் படம் படமாக்க 11 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கனல் கண்ணன் சண்டை பயிற்சி அளித்துள்ளார். டி வி வி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் வழங்கும் "வினயை விதேயா ராமா" வரும் பிப்ரவரி முதல் வாரம் தமிழ் நாடு மற்றும் கேரளமெங்கும் அந்தந்த பிராந்திய மொழிகளில் டப் செய்பட்டு வெளியாகிறது.


 

சார்ந்த செய்திகள்