ram charan meets dhoni

ராம்சரண், தற்போது ஷங்கர் இயக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராம்சரண் அண்மையில் தனியார் நிறுவனத்தின் விளம்பரப் படப்பிடிப்பிற்காக மும்பைக்குச் சென்றிருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சந்தித்தார்.

Advertisment

மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைத்தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ராம் சரண் பகிர்ந்திருந்தார். அதனுடன் 'இந்தியாவின் பெருமையை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி' என்றும் பதிவிட்டிருந்தார்.

Advertisment

ராம்சரணின் ரசிகர்கள் அவர் நடிப்பில் தயாராகி வரும் 'கேம் சேஞ்சர்' எனும் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை எதிர்பார்த்து காத்திருந்த தருணத்தில்,ராம் சரணும்எம்.எஸ். தோனியும் சந்தித்துக் கொண்டபுகைப்படங்கள் வெளியானதால், அதனைச் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.